சென்னை பல்கலைக்கழகத்தின் டிசம்பர் 2022 ஆம் ஆண்டின் தொலைதூர கல்வி படிப்புகளுக்கான ஹால் டிக்கெட் இன்று (மார்ச் 10) முதல் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே தேர்வு எழுதும் மாணவர்கள் www.ideunom.ac.in என்ற இணையதளப்பக்கத்தில் இன்று மாலை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தின் தேர்வுகள் மார்ச் 18 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.