மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மார்ச் 13 கூடியது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 4ஆம் நாள் அமர்வு இன்று நடக்கிறது. இந்நிலையில் நாட்டிற்கு எதிராகவோ அவமதிக்கும் வகையிலோ எதுவும் பேசவில்லை என ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் விளக்கமளித்துள்ளார்.

லண்டனில் இந்தியாவை அவமதித்து பேசிய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக 4 நாட்களாக நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு வருகிறது. அதோடு தொடர் அமளியால் கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 2ஆம் அமர்வில் பங்கேற்க நாடாளுமன்றம் வந்துள்ள ராகுல் காந்தி, பாஜக குற்றச்சாட்டுக்கான விரிவான பதிலை இன்று மக்களவையில் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.