அமைதியை நிலைநாட்டக்கூடிய நம்பகமான தலைவர் பிரதமர் மோடி என்று நோபல் கமிட்டியின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே கூறியுள்ளார். நார்வேயின் நோபல் கமிட்டியினர் இந்தியா வந்திருக்கின்றனர். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அஸ்லே, உலகின் மூத்த தலைவர்களில் ஒருவரான மோடி அமைதிக்கான நம்பத்தகுந்த முகங்களில் ஒருவர்.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடி பெரும் போட்டியாளராக இருப்பார் என்று அவர் கூறியுள்ளார். ஏற்கனவே உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை நிறுத்துவதற்கு இந்திய பிரதமர் பல முயற்சிகளை  மேற்கொண்டு வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.