தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு (Ration Card holders), வரும் 2026 பொங்கல் பண்டிகை இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும் மாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடம் ரொக்கப் பணம் வழங்கப்படாதது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியதால், இந்த முறை பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மகளிருக்கு உரிமைத் தொகையும் (Magalir Urimai Thogai) கிடைக்க வாய்ப்புள்ளதால், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தப் பிறகு, 2022 பொங்கலுக்கு 21 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2023 மற்றும் 2024 பொங்கலுக்குப் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை ஆகியவற்றுடன் ₹1000 ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது.
ஆனால், 2025 பொங்கலுக்கு ரொக்கம் இல்லாமல் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டுமே வழங்கப்பட்டது விமர்சனத்திற்குள்ளானது. இந்த நிலையில், 2026-இல் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால், இந்த முறைப் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் இடம்பெறும் என்று வலுவாக எதிர்பார்க்கப்படுகிறது.
