வனவிலங்கு பூங்கா ஒன்றில் காருக்கு வெளியே நின்றிருந்த ஒரு ரேஞ்சர் (பராமரிப்பாளர்) முன்னே, திடீரென ஒரு காட்டு ராஜா சிங்கம் ஓடி வருவதைப் பார்த்தால் யாருக்குமே இதயம் ஒரு நிமிடம் நின்றுவிடும்.

பார்ப்பதற்கே உடல் நடுங்கும் இந்தக் காட்சியில், அந்தச் சிங்கம் ரேஞ்சரைத் தாக்குவதற்குப் பதிலாக, ஒரு வீட்டுப் பூனையைப் போல ஓடி வந்து அவரைக் கட்டியணைத்துக் கொண்டது. மரண பயத்தில் இருந்த அங்கிருந்தவர்கள், சிங்கத்தின் இந்தப் பாசத்தைக் கண்டு ஆச்சரியத்தில் உறைந்து போயினர்.

 

View this post on Instagram

 

A post shared by Smart Animalz (@smartanimalz)

இந்த நெகிழ்ச்சியான வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகிறது. சில மாதங்களாக வெளியூர் சென்றிருந்த அந்த ரேஞ்சர், மீண்டும் காட்டில் உள்ள தனது ‘பெஸ்டி’ சிங்கத்தைப் பார்க்க வந்தபோது, அந்தச் சிங்கம் தனது பிரிவை இப்படிப் பாசமாக வெளிப்படுத்தியுள்ளது.

சுமார் 22 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “விலங்குகளுக்கும் உண்மையான அன்பு புரியும் என்பதற்கு இதுவே சாட்சி” என நெகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.