உலகின் மிகவும் ஆபத்தான பறவையாகக் கருதப்படும் கசோவரி இனப் பறவை ஒன்று கடற்கரையில் இளம்பெண் ஒருவரைத் துரத்தித் தாக்க முயலும் அதிர்ச்சியூட்டும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. டைனோசரை ஒத்து காணப்படும் இந்தப் பறவை மரங்கள் நிறைந்த பகுதியிலிருந்து வெளியேறி அந்தப் பெண்ணை இடைவிடாமல் பின்தொடர்ந்து அச்சுறுத்துவது பார்ப்பவர்களை உறைந்து போகச் செய்கிறது.

 

பறக்க முடியாதத் தன்மையைக் கொண்டிருந்தாலும் நிலத்திலும் நீரிலும் வேகமாக நகரக்கூடிய இந்த கசோவரிகள் சுமார் ஏழு அடி உயரம் வரை குதிக்கும் ஆற்றல் கொண்டவை என்பதால் இவற்றின் தாக்குதலிலிருந்து தப்பிப்பது மிகவும் கடினம் எனக் கூறப்படுகிறது.

இயற்கை ஆர்வலர்கள் மற்றும் இணையவாசிகள் பலரும் இந்தத் திகைப்பூட்டும் காணொளியைக் கண்டு வியப்பதுடன் வனவிலங்குகளைச் சாதாரணமாக எடைபோடுவது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்றும் எச்சரித்து வருகின்றனர்.