ராகுல் காந்தி எழுப்பிய ‘வாக்குத் திருட்டு’ (Vote Chori) குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவது போல, பீகாரில் நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு என்டிஏ கூட்டணித் தலைவர்களில் ஒருவரான எல்.ஜே.பி (LJP) பிரமுகரும் எம்.பி.யுமான சாம்ப்வி சௌத்ரி பத்திரிக்கையாளர்கள் முன் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தனது தந்தை (ஜெ.டி.யு தலைவர் அசோக் சௌத்ரி) மற்றும் தாயுடன் சேர்ந்து ஊடகங்களைச் சந்தித்த சாம்ப்வி, தான் வாக்களித்ததைக் காட்ட தன் வலது கையை உயர்த்திக் காட்டினார்.
அப்போது, அவரது வலது கை ஆள்காட்டி விரலில் நீல மை பூசப்பட்டிருந்தது. ஆனால், அருகில் இருந்த பெற்றோரின் கைகளைப் பார்த்தவுடன், அவர் உடனடியாக வலது கையைத் தாழ்த்திவிட்டு, பிறகு இடது கையை உயர்த்திக் காட்டினார்.
यह तो एक अलग ही स्तर का फ़्रॉड चल रहा है।
ये हैं LJP सांसद शांभवी चौधरी चौधरी। दोनों हाथों पर स्याही लगी हुई है। मतलब इन्होंने 2 बार वोट किया। जब यह बात सामने आ गई तो इनके पिता अशोक चौधरी इन्हें आँखों के इशारे से संकेत कर रहे हैं।
चुनाव आयोग, यह सब कैसे हो रहा है?
इसकी जाँच कौन… pic.twitter.com/SWs0vg4sYw— Kanchana Yadav (@Kanchanyadav000) November 7, 2025
துரதிர்ஷ்டவசமாக, அந்த இடது கை ஆள்காட்டி விரலிலும் நீல மை பூசப்பட்டிருந்தது, இது கேமரா கண்களால் வசமாகப் படம்பிடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பான 10 வினாடிகள் நீளமுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது. இரு கைகளிலும் மை பூசப்பட்டிருப்பதைப் பார்த்த நெட்டிசன்கள், “சாம்ப்வி எத்தனை முறை வாக்களித்தார்?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான பயனர்கள், இந்த வீடியோவைக் குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்தை (Election Commission) டேக் செய்து உடனடியாக விளக்கம் அளிக்குமாறு கோரி வருகின்றனர்.
இந்த வீடியோவுக்குக் காங்கிரஸ் கட்சி, “இது ஒரு நல்ல விளையாட்டு!” நக்கலாகக் கருத்து தெரிவித்துள்ளது. எனினும், இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையமோ, எல்.ஜே.பி கட்சியோ, என்டிஏ கூட்டணியோ இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை. முதற்கட்ட வாக்குப்பதிவில் 64.46% வாக்குகள் பதிவான நிலையில், இந்த இரட்டை வாக்களிப்பு சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
