செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,  இந்த ஆட்சியில் இன்னார் இனியவர் என்று இல்லை.  தவறுகள் யாரு செய்திருந்தாலும், அதன் மீது நடவடிக்கை எடுக்கின்ற உறுதியான ஆட்சி இந்த ஆட்சி. இந்த ஆட்சியில் தான் நம்முடைய அர்ச்சகர்களுக்கும்… திருக்கோயில் பணியாளர்களுக்கும்… சுமார் 89 இடங்களில்,  அவர்களுக்கு குடியிருப்புக்களை கட்டித் தருகின்ற ஆட்சி இந்த ஆட்சி.

அதேபோல் இந்த ஆட்சியில் தான், திருக்கோவிலுடைய பணியாளர்கள்…. அர்ச்சகர்கள்… பணி ஓய்வு பெற்ற பிறகு,  ரூபாய் ஆயிரத்தில் இருந்து 4000 ரூபாயாக ஓய்வூதிய நிதியை வழங்கிய ஆட்சி இந்த ஆட்சி தான்.திருக்கோயில்களிலே ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் செயல்படுகின்ற,  திருக்கோவில்களில் இந்த ஆட்சியில் அர்ச்சகர்கள் நலன் பாதுகாக்கின்ற வகையில்,

ஆண்டுதோறும் புத்தாண்டில் புத்தாடைகள் வழங்குகின்ற ஆட்சி இந்த ஆட்சி. இப்படி இந்த ஆட்சியில் நிறைவாக அச்சகர்களுடைய நலனும்,  திருக்கோயிலில் பணியாளர்களினுடைய நலனும்….  முழுமையாக காக்கின்ற ஆட்சியாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுடைய ஆட்சி திகழ்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தவறுகள் எங்க நடைபெற்றாலும் அதன் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கக்கின்ற ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி….. மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களுடைய தலைமையில் அமைந்திருக்கின்ற ஆட்சி என்பதை அறிவுறுத்த கடமைப்பட்டிருக்கிறேன். தமிழ்நாடு தேர்வாணையத்தின் வாயிலாக இதுவரையில் 200க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிறப்ப பட்டிருக்கின்றன.  மேலும்  160 க்கும் மேற்பட்ட பணிகளை எதிர்பார்த்து இருக்கின்றோம்.

திருக்கோயிலின் சார்பில் அந்தந்த திருக்கோயில்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதுவரையில் பணி அமர்த்தப் பட்டிருக்கின்றார்கள்…அதேபோல் 110 விதியின் கீழ் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து தொகுப்பூதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த  கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.அந்த வகையில் திருக்கோயிலில் இருக்கின்ற காலிப் பணியிடங்களை முழுமையாக இந்த அரசு நிரப்பிக் கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.