மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா/இஸ்ரேல் இடையிலான போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், வடகொரியா நேரடியாக இதில் தலையிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை காட்டுமிராண்டித்தனமான செயல் என வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், பிராந்தியத்தில் பதற்றத்தை தேவையற்ற முறையில் அதிகரிப்பதாகவும் வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் வடகொரியா, இந்த விவகாரத்தில் ஈரானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது, மத்திய கிழக்கு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
