விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அரசியல் களத்தில் இருக்கின்ற இயக்கம் முழுமையான ஒரு அரசியல் இயக்கமாக மாற வேண்டும்.  ஒரு பொலிட்டிக்கல் ஆர்கனைசேஷன். பொலிடிகல் பார்ட்டி,  சாதி சங்கம் என்பது சமூக இயக்கம். மத அமைப்பு என்பது பண்பாட்டு இயக்கம். அரசியல் கட்சி என்பது அது இரண்டையும் கடந்த….  உயர்ந்த இலக்கை கொண்ட இயக்கம்.

இந்த வேறுபாட்டை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே விடுதலைச் சிறுத்தை கட்சி என்பது 2002இல் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட ஒன்றாக இருந்தாலும்,  தலித்துகளுக்கான இயக்கம் என்கின்ற அடையாளத்தோடு தொடர்ந்து பயணித்து வந்த நிலையில்,  ஒரு நாள் தான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தேன். அன்றைக்கு அதை பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் மீதுள்ள நம்பிக்கையால் ஏற்றுக் கொண்டீர்கள்.

அவர் சொன்னால் ஏற்றுக்கொள்வோம் என்ற அந்த நம்பிக்கை தான் நம்மை பிணைத்து வைத்திருக்கிறோம். தொடர்ந்து பயணிக்க வைக்கிறது. 2008இல் வேளச்சேரியிலேயே நாம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். ”வேளச்சேரி தீர்மானம்” என்று அதற்கு பெயர் சூட்டி இருக்கிறோம். அந்த தீர்மானத்தில் இந்த கட்சி ஒரு அரசியல் இயக்கமாக பரிணாமம் பெற வேண்டும். அரசியல் இயக்கமாக பரிணாமம் பெற வேண்டுமானால் ? இந்த கட்சிக்குள்ள அனைத்து தரப்பினரும் உள்ளே வரவேண்டும். உள்வாங்கப்பட வேண்டும்.

அதுதான் வேளச்சேரி தீர்மானம். தலித் அல்லாதவர்கள் உள்ளே வர வேண்டும். குறிப்பாக பெண்கள் உள்ளே வர வேண்டும்.  சிறுபான்மையினர், முஸ்லிம்களும்,  கிறிஸ்தவர்களும் உள்ளே வரவேண்டும். கணிசமான அளவில் அவர்கள் பொறுப்புகளுக்கு வரவேண்டும். அதிகாரம் கட்சி அதிகாரம். ஆட்சி அதிகாரம் என்பதை போல கட்சி அதிகாரம் உண்டு. அந்த கட்சி அதிகாரத்தில் தலித் அல்லாதவர்களும் இடம் பெற வேண்டும் என முடிவு செய்தோம் என தெரிவித்தார்.