27,29, 30 ஆகிய மூன்று தினங்கள் மதுரையில் டாஸ்மார்க் கடை மது கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மருது பாண்டியர்கள் நினைவு நாள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடைய ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை ஒட்டி மதுரையில் இருக்கக்கூடிய மதுபான கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை விடுவதாக மதுரை மாவட்ட ஆட்சியாளர் சங்கீதா அவர்கள் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

27ஆம் தேதி நாளை சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டும்,  29 மற்றும் 30ஆம் தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறக்கூடிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவருடைய ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு,

மதுரை மாவட்டத்தில் 27, 29, 30 ஆகிய மூன்று நாட்களுக்கு FL 1, FL 2, FL 3, FL 3A , FL 4A  மற்றும் FL 11 ஆகிய உரிமம் பெற்றுள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள்,  மனமகிழ் மன்றங்கள்,  தங்கும் விடுதிகளுடன் கூடிய மது அருந்தகம்,  முன்னாள் வீர்கள் மூலமாக நடத்தப்படக்கூடிய கேண்டின் மற்றும் அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடிய சில்லறை கடைகள் மூடப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியாளர் சங்கீதா அவர்கள் அறிவித்திருக்கிறார்.

இந்த மூன்று நாட்களில் விற்பனை தொடர்பான விதிமுறைகள் ஏதேனும் நடைபெற்றால் கண்காணிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்,  மூன்று நாட்களுக்கு  மதுபான சில்லறை விற்பனையில் ஏதும் நடைபெறாது என்றும் மதுரை மாவட்ட ஆட்சியாளர் சங்கீதா அவர்கள் தற்போது அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார்.