சென்னை சோழிங்கநல்லூர் மத்திய பகுதி தி.மு.க சார்பாக காரப்பாக்கத்தில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.எழிலன் நாகநாதன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இதையடுத்து எம்எல்ஏ எழிலன் மேடையில் பேசியபோது “திராவிட மாடல் என தமிழ்நாடு முதல்வர் கூறும்போது ஆளுநருக்கு, மத்திய பாஜக அரசுக்கும், ஆர்எஸ்எஸ் போன்றவர்களுக்கும் வயிற்று எரிச்சலாகவுள்ளது.
தமிழ்நாடு என இருக்கும் போது நீங்கள் ஏன் திராவிட மாடல் என கூறி வருகிறீர்கள் என்று பலரும் கேட்கின்றனர். இது ஓரிரு நாட்களில் உருவான தத்துவம் கிடையாது. கால காலமாக 2,500 வருடமாக அடிமைப்பட்ட சமூகத்தை மீட்டெடுத்த வரலாறு தான் திராவிட மாடல் ஆட்சி” என்று அவர் பேசினார்.