பெரம்பலூர் மாவட்டத்தில் பாப்பாத்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். இதனிடையே பாப்பாத்தி தமிழக அரசிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்தார். இந்நிலையில் பாப்பாத்தியின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ஒப்பந்த அலுவலக உதவியாளராக பணிபுரிவதற்கான ஆணையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பாப்பாத்தி முதுநிலை பட்ட மேற்படிப்பு முடித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை வாயிலாக அலுவலக உதவியாளருக்கான பணி நியமன ஆணையை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.