சேலத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின்,  இன்றைக்கு பிரதமராக இருக்கும் அவர்,  ஒரு காலத்திலே ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஆக இருந்தவர் தான். ஆனால் இன்றைக்கு மாநிலங்களை  மொத்தமாக ஒழிச்சு கட்டுற  முயற்சியை தான் பிரதமர் வந்ததிலிருந்து மோடி அவர்கள் செய்து கொண்டிருக்கிறார். மாநில அதிகாரத்திற்கு உட்பட்டவைகளுக்கு ஒன்றிய பாஜக அரசு சட்டங்கள் ஏற்றுகிறது. எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் மாநில அரசு கிட்ட ஆலோசனைகள் செய்வது இல்லை. எதற்கும் மாநில முதலமைச்சர்களோடு ஆலோசனை கேட்பதில்லை.

புதிய கல்விக் கொள்கை, நீட், ஜி.எஸ்.டி  இப்படி மாநிலங்களுடைய  கல்வி,  நிதி ஆதாரத்தை  முற்றிலும் பறிச்சிட்டாங்க. ஒன்றிய அரசுக்கு பணம் தருகின்ற  ஏடிஎம் ஆக மாநிலங்களை மாத்திட்டாங்க. மிகப்பெரிய இயற்கை பேரிடர் காலத்தில் கூட நமக்காக உதவி செய்வதில்லை. பேசுனங்களே…. சமீபத்தில் வந்த பேரிடருக்கு 37,000 கோடி பணம் கேட்டிருக்கிறோம். ஆனால் இதுவரைக்கும் ஒரு பைசா கூட வரல. 

பிரதமர் வந்தாரு… தருவேன்னாரு…. நிதியமைச்சர் வந்தார், தருவேன்னு சொன்னாரு…  பாதுகாப்பு துறை அமைச்சர் வந்தார், தருவேன்னு சொன்னாரு….  உள்துறை அமைச்சரை நம்ம டி.ஆர் பாலு அவர்கள் தலைமையில் எம்பிக்கள் எல்லாம் பார்த்தபோ…  அவரும் தருவேன்னு சொன்னாரு…. ஆனா இப்போ வரைக்கும் ஒன்னும் வரல என தெரிவித்தார்.