முதலீடுகள் ஈர்ப்பது தொடர்பாக பயண நாட்கள் தவிர்த்து, 8 நாட்கள் அரசுமுறை பயணமாக ஸ்பெயின் புறப்படுகிறேன் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  கூறியுள்ளார். மேலும் ஸ்பெயின் நாட்டில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த உள்ளேன் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு உகந்த மாநிலம் என்பதை எடுத்துரைக்க உள்ளேன் எனவும் தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவதே நமது இலக்கு எனவும் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியுள்ளார்.