பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ரஜினியுடன் சேர்ந்து கபாலி, வெற்றிச்செல்வன் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் அதிக படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே அடிக்கடி யாரும் சொல்லத் தயங்காத விஷயங்களை துணிச்சலாக கூறி வருகிறார். அந்த வகையில் ஒரு பேட்டியின் போது நடிகை ராதிகா தன்னுடைய மார்பகங்களை பெரிதாக்க சொன்னார்கள் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அதாவது பாலிவுட் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் மூக்கு சரியாக இல்லை எனவும் மார்பகங்கள் சிறிதாக இருப்பதால் அதை பெரிதாக்கி வருமாறு கூறியதாகவும் ராதிகா கூறியுள்ளார். அதன் பிறகு உடல் எடை 2 முதல் 3 கிலோ வரை அதிகரித்ததால் பட வாய்ப்புகள் பறிபோனது எனவும் ராதிகா கூறியுள்ளார். மேலும் சிலர் பெண்களின் உடலை பற்றி பேசுவதை தங்கள் உரிமையாகவே கருதுகிறார்கள். என்னிடம் இப்போது அந்த மாதிரி யாராவது பேசினால் அவர்களை சுட்டுவிடுவேன் என ராதிகா ஆவேசமாக கூறியுள்ளார்.