சொரிமுத்து அய்யனார் கோயில் வழக்கில் பிக்னிக் போன்று கோவிலுக்கு செல்வதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து கூறியுள்ளது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள சொரிமுத்தையனார் கோயில் திருவிழாவிற்கு குறைந்த அளவு பக்தர்களை அனுமதிக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. புலிகள் காப்பகப் பகுதியில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பு எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் நீதிபதி, அதிக ஒளி உமிழும் விளக்குகளால் பல்லுயிர் சூழல் மாறுபடும் நிலை ஏற்படுகிறது. சாமி தரிசனம் செய்பவர்கள் ஏதோ பிக்னிக் ஸ்பாட்டுக்கு வருவது போல முண்டந்துறையை மாற்றியுள்ளனர். முன்பு போல் தீப்பந்தம் ஏந்தி கோயிலுக்கு சென்றால் வனவிலங்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு நேராது என கருத்து தெரிவித்துள்ளனர்.