செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாட்டில் ஆருயிர் சகோதரர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி  வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதை பின்பற்ற வேண்டும் என்று பல மாநிலங்கள் முனைகின்றன. இந்தியாவிற்கு வழிகாட்டக்கூடிய இடத்தில் தளபதி ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என் ரவி பொறுப்பேற்றதில் இருந்து வானளாவிய அதிகாரங்களைக் கொண்டவர் போல் செயல்பட்டு வருகின்றார். அரசியலமைப்பு சட்டத்தின் மரபுகளை மீறி செயல்படுத்து வரும் ஆளுநர்,  இந்துதூவாகோட்பாடுகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவது   கண்டனத்துக்குரியது.

சனாதன தர்மம் தான் இந்தியாவை  வழிநடத்துகின்றது என்று ஆளுநர் பேசி வருவது சரி அல்ல. திருவள்ளுவருக்கும், வள்ளலாருக்கும் சனாதன சாயம் பூசுகிறார். உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பிறகும்…. தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்டமசோதாவுக்கு ஒப்புதல் தர மறுக்கிறார். உச்சநீதிமன்றம் கூறியவாறு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து இருக்கிறார். இதன் பிறகாவது  ஆளுநர் அவர்கள் முறையாக தனது கடமையை  நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.