
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நம்மைப் பார்த்து பயத்தினால் உலறுகிறார்கள். இங்கே இருந்த நிர்வாகிகளை கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை ஆயிரங்கள், லட்சங்கள், கோடிகள் என்று கொடுத்து விலை பேசி வாங்கி சென்ற பிறகும்… இந்த இயக்கம் கட்டு குலையாமல் முன்பை விட வேகமாக இன்றைக்கு தமிழ்நாட்டிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை..
ஒரு சில ஏரியாக்களில்.. பகுதியில்… நம்ம இயக்கத்தின் மாநில பொறுப்பில், மாவட்ட பொறுப்பில், அந்தப் பகுதி நிர்வாகிகளை வழி நட த்துகிற பொறுப்பில் இருந்தவர்கள் எல்லாம் போனாங்க. உதாரணத்துக்கு சொல்றேன்னு திருச்சியில் நம்மை இயக்கத்தில் இருந்த ஒரு முக்கியமான பொறுப்பில் இருந்தவர் போனாரு. அவர் இருந்தப்ப இருந்த செயல்பாட்டை விட இப்ப அதிகமாக தொட்டியம் ராஜசேகர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆக நியமிக்கப்பட்ட செந்தில் நாதனும், அன்புச் சகோதரர் கேவிடி கலைச் செல்வமும் இன்றைக்கு முன்பை விட வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
99 சதவீதம் நிர்வாகிகள் அங்கே எல்லா கிளை கழகம் வரை நிர்வாகிகளை நியமனம் செய்து விட்டார்கள். பூத் கமிட்டி அமைக்கின்ற வேளையிலே துரிதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். டிசம்பர் 31 பூத்து கமிட்டியை சிறப்பாக அமைத்து நீங்கள் வந்து பூத்து கமிட்டி உறுப்பினர்களை சந்திக்கின்ற ஒரு மாபெரும் மாநாட்டை இங்கு நடத்த இருக்கிறோம் என்று என்னிடம் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
அது போல் தான் சேலத்திலும் நமது அருமை பொருளாளர் எஸ்.கே செல்வம் அவர்கள் தலைமையில அங்கே மாபெரும் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த இருக்கிறார். இதுபோல்தான் மதுரை மண்டலத்தில் மகேந்திரன் அவர்கள், டேவிட் அண்ணாதுரை அவர்கள் தலைமையில் அவர்கள் இப்போது பூத் கமிட்டி அமைக்கும் வேளையிலே மும்மரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.