வேலூரில் பெண் சத்துணவு அமைப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் பாரிஜாதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் மனஉளைச்சலில் இருந்த பாரிஜாதம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தனது மரணத்திற்கு BDO, BDO மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை செய்தபோது இந்த கடிதத்தை கைப்பற்றினர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.