மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களின் இனிமையான பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் புயலை கிளப்பி வருகிறது. ‘தேரா மேரா ஹை ப்யார் அமர்’ என்ற பாகிஸ்தானிய பாடகர் அகமது ஜஹான்ஜெப்பின் பாடலை இவர்கள் பாடிய விதம் மில்லியன் கணக்கான இதயங்களை வென்றுள்ளது.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் மூலம் பகிரப்பட்டு, 48 லட்சத்திற்கும் மேல் பார்வைகளைப் பெற்று, லட்சக்கணக்கான லைக்குகளுடன் வைரலாகி வருகிறது. இவர்களின் திறமை, பெரிய அரங்குகள் இல்லாமலேயே உண்மையான திறமை உலகை வெல்லும் என்பதை நிரூபித்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Kishore Mondal (@kishore_mondal_official)

வீடியோவில், இளைய சகோதரர் தனது இனிமையான குரலில் பாடலைத் தொடங்க, கேட்பவர்களின் முகத்தில் புன்னகை பூக்கிறது. பின்னர், மூத்த சகோதரர் தனது முதிர்ந்த, ஆழமான குரலால் பாடலுக்கு மேலும் மெருகூட்டுகிறார். இருவரும் ஒவ்வொரு வரியையும் உணர்ச்சி பொங்க பாடி, கேட்பவர்களை மயக்கியுள்ளனர்.

இந்த வீடியோவுக்கு பயனர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். “உங்கள் குரல் ஆன்மாவைத் தொட்டுவிட்டது,” என்று ஒருவர் கருத்து தெரிவிக்க, “இந்த ஜோடி பாலிவுட்டில் பெரிய இடத்தைப் பிடிக்கும்,” என மற்றொருவர் புகழ்ந்துள்ளார். இவர்கள் தொடர்ந்து இப்படி பாடினால், இந்திய இசைத்துறையில் பெரிய மேடைகளில் பிரகாசிக்க வாய்ப்பு உறுதி என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.