தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது மேலும் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். ஆரணியை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என சேவூர் ராமச்சந்திரன் கூறியதற்கு அமைச்சர் இந்த பதிலை தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 புதிய மாவட்டங்களை அமைக்க வேண்டும் என கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதால், நிதி நிலைமைக்கு ஏற்ப முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து ஆரணி, தூத்துக்குடியைப் பிரித்து கோவில்பட்டி, தஞ்சாவூரை பிரித்து கும்பகோணம், திண்டுக்கல்லை பிரித்து பழனி, கோயம்புத்தூரை பிரித்து பொள்ளாச்சி போன்றவைகள் தனி மாவட்டங்களாக உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களையும் பிரிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாவும்  தகவல் வெளியாகியுள்ளது.