தமிழகத்தில் நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பல புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் தமிழகத்தில் புதிதாக எட்டு மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க திட்டமிட்டு உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். புதிய மாவட்டங்களை உருவாக்குவது குறித்து நிதி நிலைக்கு ஏற்ப முதல்வர் ஸ்டாலின் விரைவில் நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவித்துள்ளார். எனவே தமிழகத்தில் புதிதாக எட்டு மாவட்டங்கள் உருவாக இருப்பது உறுதியாகி உள்ளது.