செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, எல்லா கிராமங்களிலும். எல்லா நகரங்களிலும்… பெண்கள் வேண்டாம்னு சொல்ல கூடியது டாஸ்மாக். அதனால டாஸ்மாக்கை ஒலிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கருத்து. அது தான் நான் பெண்களுடைய உரிமையாக கருதுகின்றேன்.  பெண்கள் தன்னுடைய உரிமையாக கருதுகிறார்கள்.  மதுவில்லா தமிழகம் தான் தமிழக பெண்களுடைய உரிமையாக கருதுகிறார்கள் என தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் எல்லாரும் வேல் தூக்கினார்கள். இந்த தேர்தலில் திமுக,  நாம் தமிழர் கட்சி அதனை தூக்காதது குறித்த கேள்விக்கு பதிலளித்த கிருஷ்ணசாமி,

அவங்களுக்கு ஓட்டு தானே முக்கியம். அவர்களுக்கு தமிழ்நாடு மக்களை மதரீதியாக பிரித்து,  ஓட்டு வாங்க வேண்டும்.எல்லா நகரத்திலும்… மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் எல்லாம் சாலையும் உடைச்சு போட்டுருதாங்க. சாலை வசதியே இருப்பதில்லை. ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய ராஜபாளையம் நகராட்சியில் நகராட்சிகுள்ள வந்தா  சாலைகளே இல்லை. அதேபோல் அபரிதமான வரி.

மக்கள் வந்து நிம்மதியாக வாழ முடியாத அளவிற்கு பாதுகாப்பு அற்ற நிலை இருக்குது.  சட்ட ஒழுங்கு மோசமாக இருக்கிறது. சட்ட ஒழுங்கு பாதுகாப்பு இருக்கணும்.  மக்களுக்கு பாதுகாப்பு இருக்கணும். வேலியே பயிரை மேயும் அளவுக்கு வந்துட்டு, ஆளுங்க கட்சிக்காரர்கள்… அமைச்சர்கள்  கமிஷனர் எடுத்துக்கிறாங்க.  அதுக்கு கீழ இருக்கற மாவட்ட செயலாளர்களுக்கும்,  ஒன்றிய செயலாளர்களுக்கும், கீழ் இருக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் பகிர்ந்து அளித்து விடுகிறார்கள் என தமிழக அரசை விமர்சனம் செய்தார்.