மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசிய திமுக வடக்கு தொகுதி எம்எல்ஏ கோ.தளபதி, மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி ஆகியோரை நேரடியாகத் தாக்கினார்.

“ஒரு வார்டில் பூத் கமிட்டி போடக்கூட ஆள் இல்லாத கட்சிதான் காங்கிரஸ். வெறும் 3000 ஓட்டுக்களை வைத்துக் கொண்டு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்கிறார்கள்.

இவர்கள் இல்லையென்றால் கூட்டணியே கிடையாதா? இவர்களின் திமிரைப் புரிந்து கொண்டு தலைமை அடுத்த முறை சீட்டே கொடுக்கக்கூடாது” என ஆவேசமாகப் பேசினார்.

இந்த விமர்சனத்தைக் கேட்டு கொந்தளித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், தனது எக்ஸ் (X) தளத்தில் தளபதிக்கு மரண மாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

“அதிகாரத் திமிருடன் இருப்பவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தோழமைக் கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது. வரும் தேர்தலில் தளபதி போட்டியிடும் மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரே நிற்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன்” எனப் பதிவிட்டுள்ளார்.