மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஈடாக தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கனவே அகவிலைப்படியை எந்த அளவுக்கு உயர்த்த முடியுமோ அந்த அளவுக்கு உயர்த்தி விட்டதாக தெளிவுபடுத்தியுள்ளார்.

அதன் பிறகு பட்ஜெட் தாக்கலின் போது மாநில அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அகவிலைப்படி உயர்வு தங்களுக்கு போதாது என்றும், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஈடாக தங்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும் எனவும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளதோடு தற்போது போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் வருகிற மார்ச் 10-ஆம் தேதி அரசு ஊழியர்கள் தரப்பில் மாபெரும் போராட்டம் எனவும் அறிவித்துள்ளனர்.