மனித உடல்களை மண்ணாகவும் உரமாகவும் மாற்ற வாஷிங்டன் அனுமதி அளித்துள்ளது. பொதுவாக மனித உடல்களை எரிப்பது அல்லது புதைப்பது வழக்கம். ஆனால் இனி உரமாக மாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைக்கு அமெரிக்காவில் அடுத்தடுத்த ஐந்து நகரங்கள் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இந்த வரிசையில் நியூயார்க்கும் இணைந்துள்ளது.

உடல்கள் பல நூற்றாண்டுகளாக சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டு பூமிக்கு அடியில் புதைக்கப்படுகின்றன. அல்லது தகனம் செய்யப்படுகின்றன.இவ்வாறு புதைக்கப்படும் அல்லது தகனம் செய்யப்படும் உடல்களை உரமாக மாற்றும் தொழில்நுட்பத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த நடைமுறையை கட்டையால் செய்யப்பட்ட கண்டெய்னர் ஒன்றில் இறந்து போன மனிதனின் உடலை அதற்குள் வைத்து மரத்துகள்கள், செடி, கொடி ஆகியவற்றினால் நிரப்பி மூடி விடுவார்கள்.

இதனால் பாக்டீரியாக்கள் விரைவில் அந்த உடலை கெட்டுப் போக செய்து விடும் என செயல்முறை விளக்கங்கள் குறிப்பிடுகின்றது. இந்த உரம் சாதாரண மண்ணை விட பல மடங்கு உரமிக்கதாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது இந்த நடைமுறை அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறுகின்றனர்.