பிரதமர் மோடியின் ‘இரட்டை எஞ்சின்’ முழக்கத்தைத் தனது பாணியில் கிண்டல் செய்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மாநிலங்களின் வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களையும் அடுக்கியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெற்ற என்.டி.ஏ. கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “தமிழகத்தில் பாஜக – என்.டி.ஏ.வின் இரட்டை எஞ்சின் அரசு அமைவது உறுதி. திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட மக்கள் துடிக்கிறார்கள்” எனப் பேசினார். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது!
மாண்புமிகு பிரதமர் அவர்களே…
ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க…
நீங்கள் சொல்லும்… https://t.co/n1xWOZUgrV— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) January 23, 2026
இதற்குத் தனது ‘எக்ஸ்’ (X) பக்கத்தில் பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “பிரதமர் அவர்களே, நீங்கள் சொல்லும் ‘டபுள் எஞ்சின்’ மாநிலங்களான உத்திரப் பிரதேசம், பீகாரை விட, உங்கள் ‘டப்பா எஞ்சின்’ நுழையாத தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்கின்றன” எனச் சாடினார்.
மேலும், மத்திய பாஜக அரசு கொடுக்கும் முட்டுக்கட்டைகளைத் தாண்டியே தமிழ்நாடு வளர்ந்துள்ளதாகவும், டெல்லி ஆணவத்துக்குத் தமிழ்நாடு தலைகுனியாது என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
