செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவை பொருத்தவரை அவர்கள் இது ஒரு நாடகமாகத்தான் பார்க்கிறார்கள். நீட் என்பது தமிழ்நாட்டில் எல்லோரும் ஏத்துக்கிட்டாச்சு. 8 வருஷம் ரிசல்ட் இருக்கு. 2016ல் இருந்து எட்டு வருஷம் ரிசல்ட். அந்த ரிசல்ட்டை ஆய்வு பண்ணி பார்த்தாலே நீட்டைப் பொறுத்தவரை அது  ஏழை மக்களுக்காக…. பின்தங்கிய மக்களுக்காக… சாமானிய குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் மக்களுக்காக நீட் பரிசை இருக்கும் என்பது ஊர்ஜிதம்.

டேட்டா கிடையாது… வெள்ள அறிக்கை கிடையாது… எட்டு வருஷம் டேட்டா மாநில அரசு கையில் இருக்கு, அவங்க வெள்ளை அறிக்கை கொடுக்கலாம். நீட்டுக்கு வெள்ளை அறிக்கை வேண்டும் என்று மூன்று ஆண்டுகளாக… 2 ஆண்டுகளாக நான் கேட்டுக்கிட்டு இருக்கேன்… பாரதிய ஜனதா கட்சி மூன்றாண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கிறது…  வெள்ளை அறிக்கை கிடையாது, டேட்டா ஆய்வு  கிடையாது.

எந்த குடும்பத்திலிருந்து யாரு போயிருக்கா ? முதல் தலைமுறை… இரண்டாம் தலைமுறை… எதுவுமே இல்லாமல்…  ஒரு மாநில அரசு ஆட்சி அதிகாரத்துல 30 மாசமா இருக்காங்க.. மருத்துவ அமைச்சர் வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும்…  இங்க பாருங்க எட்டு வருஷம் டேட்டா…  டேட்டாவை ஆய்வு  பண்ணுனா இத்தனை டாக்டரோட குழந்தை  டாக்டர்களாக  இத்தனை பேர் போயிருக்காங்க…

அரசு மருத்துவமனைக்கு முதல் தலைமுறை இத்தனை பேர் வந்திருக்காங்க…. அரசு ஸ்கூல்ல இருந்து… கவர்மெண்ட் ஸ்கூல்ல இருந்து இத்தனை பேர் வந்திருக்காங்க…. எந்த டேட்டாவும் கொடுக்காமல்,  எப்படி நீட்டுக்கு மக்கள் எதிரி என சொல்ல முடியும். நான் கேட்கிறது டேட்டாவை கொடுத்து பேசுங்க. அல்லது உண்மையாலுமே நீட்டை ஒழிக்கணும்னா…

சுப்ரீம் கோர்ட் போங்க….  எதுவுமே இல்லாம,   திமுக என்கிற கட்சி  50 லட்சம் பேர்ட்ட நான் கையெழுத்து வாங்கிவிட்டால் ? அது சாதனையா ?  திமுக என்கிற கட்சி 1949 வருஷத்தில் இருந்து இருக்கு ….உங்களால் 50 லட்சம் கையெழுத்து கூட வாங்க முடியலன்னா…  தமிழ்நாட்டில் எதுக்கு கட்சி நடத்துறீங்க ?  இழுத்து மூடிட்டு போயிருங்க? என விமர்சனம் செய்தார்.