
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டம் சாத் பகுதியில் ஏற்பட்ட குடும்பத்தகராறு ஒன்று இறுதியில் கொலையில் முடிந்து அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான டிராக்டர் ஓட்டுநர் தீரேந்திர பாஸ்வானை, அவரது மனைவி ரீனா மற்றும் மருமகன் சதீஷ் பாஸ்வான் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்தனர்.
ரீனா தனது மருமகனுடன் கடந்த சில மாதங்களாக காதல் உறவில் இருந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. ஒரு நாள் கணவர் இருவரையும் தகாத சூழ்நிலையில் பார்த்ததார். இதனால் கணவன், மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டது.
மே 10ஆம் தேதி இரவு, தீரேந்திராவின் உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அவரை ரீனா மயக்கத்தில் ஆழ்த்தினார். பிறகு, வீட்டில் கிடந்த உடைந்த கதவின் சட்டத்தை எடுத்து கணவனின் தலையில் பலமுறை தாக்கி கொன்றார்.
இந்த கொலைக்குத் துணை புரிந்த மருமகன் சதீஷ் முதலில் பயந்தாலும், பின்னர் ரீனாவின் வற்புறுத்தலால் சம்பவத்தில் ஈடுபட்டார். திடீரென கணவர் காணாமல் போனதை அடுத்து, அவரது உடல் வீட்டிலேயே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். போலீசாரின் மொபைல் சோதனையில், ரீனாவிடம் 50க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், ரீல்ஸ் களையும் கண்டுபிடித்தனர்.
முன்னதாக இன்ஸ்டாகிராம் கணக்கை முழுமையாக அழித்துவிட்டு தன்னிடம் மொபைல் இல்லை என காவல்துறையை ஏமாற்ற முயற்சித்தாராம். ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில் உண்மை வெளியானது. குற்றவாளிகள் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர்.