
புதுடெல்லி மாநிலத்தில் உள்ள காவல் துறையினர் மற்றும் குஜராத் காவல்துறையினர் இணைந்து போதைப் பொருளுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை அடிப்படையில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து குஜராத் அங்கலேஸ்வர் பகுதியில் ஆவ்கார் மருத்துவ நிறுவனம் ஒன்றில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சுமார் 518 கிலோ கொகைன் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இந்த போதைப் பொருளின் சந்தை மதிப்பு சராசரியாக ரூபாய் 5000 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதேபோன்று கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி மகிபால்பூரில் துஷார் என்பவருடைய தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் 500 கிலோ எடை உள்ள கொகைன் மற்றும் 40 கிலோ எடை கொண்ட ஹைடிரோபோனிக் மரிஜுவானா போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி டெல்லியில் உள்ள ரமேஷ் நகரில் உள்ள கடையில் சுமார் 208 கிலோ கொகைன் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்தத் தொடர் விசாரணையில், இந்த போதைப் பொருள்கள் அனைத்தும் பார்மா சொல்யூஷன் சர்வீஸ் என்ற மருந்து விற்பனை நிறுவனத்திற்கு உரியது என்றும் ஆவ்கார் மருத்துவ நிறுவனத்திலிருந்து வந்துள்ளது என தெரியவந்தது. ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புடைய போதைப் பொருட்கள் கடந்த இரண்டு வாரத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.