சமூக வலைதளங்களில் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வைரலாகி வருகிறது. லக்னோவில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில், சுமார் 14 வயதுள்ள சிறுமி ஒருவர், ஓடும் ரயிலின் படிக்கட்டில் நின்று வெளி காட்சிகளை பார்க்கும் காட்சி பதிவாகியுள்ளது.

அந்த நேரத்தில், பின்னால் நின்ற ஒருவர், ரயிலின் வேகம் அதிகமாக இருப்பதாக எச்சரித்து, இறங்க வேண்டாம் என அறிவுறுத்துகிறார். ஆனால், சிறுமி நான் இறங்கப்போறேன் என பதிலளித்து, ரயிலிலிருந்து குதித்து விடுகிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Lokmat (@lokmat)

இந்த வீடியோவில் அந்த மனிதர், சிறுமியின் திடீர் நடவடிக்கையால் திகைத்துக் காணப்படுகிறார். அவர் உடனடியாக கதவின் அருகே சென்று ரயிலில் இருந்து கீழே பார்த்தும் அந்த சிறுமியை காண முடியவில்லை.

இந்த வீடியோ பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தையின் ஆபத்தான முடிவு மற்றும் வீடியோ எடுத்து கொண்டிருந்த நபரின் நேரடி தலையீடு இல்லாதது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.