ஓபிஎஸ் அணி சார்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர், அம்மா பேரவை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் பேசும் போது, ஒரே ஒரு விஷயத்தை சொல்லி முடிக்க ஆசைப்படுகிறேன். பொதுக்குழு குண்டர்களை வைத்து நடத்தினார்கள் என்று அண்ணன் கோபாலகிருஷ்ணன் சொன்னது போல, வட மாநிலத்தவரை வைத்து மாநாடு நடத்துகிறார். பொதுக்குழு நடத்தும் பொழுது தலைமைக் கழகத்திற்கு தலைமைக் கழக பொருளாளராக ஒருங்கிணைப்பாளராக சென்றபோது, ஏதோ அம்மா குடியிருந்த கோயிலை  நாம் தாக்கியதாகவும், 

அம்மா குடியிருந்த கோயில் கோயில் என்று இந்த ஊடகங்களை எல்லாம் தன் பக்கம் திருப்பி வைத்திருக்க கூடிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூக்குரலிட்டார்கள்,  அந்த அணியினர்… இதே பத்திரிக்கையாளர்களை பார்த்து கேட்கிறேன். எங்களது இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அமர்ந்திருந்த அறையை நீ பூட்டி வைத்து வணங்கிக் கொண்டிருக்கிறாயா ? என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக எடப்பாடி பார்த்து கேட்கிறேன். 

அதேபோல புரட்சித்தலைவி அம்மா அமர்ந்திருந்தபோது நாங்கள் சென்று பார்த்த அந்த இருக்கையை அருகாமையில் வெறும் இருக்கையாக வைத்திருக்கிறாயா என்பதையும் எடப்பாடியை இந்தக் கூட்டத்தின் வாயிலாக கேட்கிறேன். புரட்சித்தலைவி அம்மா அமர்ந்திருந்த அந்தக் கோயிலில்….  அந்த புரட்சித்தலைவி அம்மா மட்டுமே அமர்ந்திருந்த அந்த அறையில்….  அந்த நாற்காலியில்…  இன்று அமர்ந்திருக்கக் கூடியவன் எடப்பாடி பழனிச்சாமி.

நீ சொல்லுகிறாய் புரட்சித்தலைவி அம்மா இருந்தது கோயில். அது அறை, அம்மா இருந்த நாற்காலி. இதையெல்லாம் நீ பூட்டி வைத்து பூஜை செய்துவிட்டு இதைச் சொன்னால் நான் ஏற்றுக்கொள்கிறேன்.  அம்மாவின் பொறுப்பு மட்டுமல்ல… அம்மாவின் நாற்காலி…  அம்மாவின் அரை எல்லாம்… நீ ஆக்கிரமித்து விட்டு,  நாங்கள் அந்த அலுவலகத்திற்கு சென்றால் ? அம்மா உட்காருந்திருந்த கோயில், அம்மா உட்கார்ந்து இருந்த அறை, அம்மாவு உட்கார்ந்திருந்த நாற்காலி என்ன நாடகம்.

 இதற்கு இதையெல்லாம் பொறுப்பாளர்கள்,  தொண்டர்கள் உணரும் பொழுது இந்த எடப்பாடி பழனிச்சாமி சிந்தை பிடித்து தூக்கி எறிகின்ற காலம் வரும். அதுவரை நம் போராட்டத்தில் கட்டாயமாக… சத்தியமாக எனது பங்கு இருக்கும். என் மாவட்டத்தில் எத்தனை சறுக்கல்கள் ஏற்பட்டாலும்,  என் சோழமண்டல தளபதி துணையோடு அண்ணன் ஒருங்கிணைப்பாளர் அவர்களை அரியணையில் அமர்த்தும் வரை நான் உங்களோடு கட்டாயமாக புதிய பொறுப்பாளர்களை விரைவில்  நியமித்து  அண்ணன் அவர்களுக்கு தந்து, இந்த போராட்டத்தில் நான் இடையூறு இல்லாமல்,  சிறிதளவு மனசோர்வு இல்லாமல் நான் போராட தயாராக இருக்கிறேன் என்பதை தெரிவித்து விடைபெறுகிறேன் நன்றி வணக்கம் என பேசி முடித்தார்.