ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அந்த அணியின் செய்தி தொடர்பாளர் கண்ணன்.ஜி பேசும் போது, வாய்கிளிய பேசுகின்ற வந்தேறிகளே..  நீங்கள் பாய்கிழிய பேசிய பேச்சு நமக்கு புரியாததா ? உங்களுக்குத்தான் தெரியாததா ? ஒன்றான இயக்கத்தை, ரெண்டாக்கியவன், ரெண்டான இயக்கத்தை துண்டாக்கியவன்,  கட்சியைப் பிளந்தவன், நம் கழகத்தைப் பிரிந்தவன், அந்த சண்டாளனுக்கு, அந்த சதிகாரனுக்கு, மானமுள்ள மடையனுக்கு, வெட்கமெல்லாம் வேந்தனுக்கு ,ரோஷம் இல்லா ராசனுக்கு, சூடு இல்லாத செங்கலுக்கு, சொரணை இல்லா சங்களுக்கு, எழுச்சி எல்லாம் மூடனுக்கு, மகிழ்ச்சி இல்லா தொண்டனுக்கு, எழுச்சி மாநாடு ஒரு கேடா.

இந்த எழுச்சி மாநாடு ஒரு கேடா… நீ இல்லாத இயக்கமே எங்கள் இயக்கம் போடா.  மனித புனிதராக ஆரம்பித்த நம் இயக்கத்தை,  புனிதவதி புரட்சித்தலைவி போற்றி வளர்த்த நம் கழகத்தை…. புறம்போக்குகளும் –  புண்ணாக்குகளும் ஆட்டி  படைப்பதா ? ஆட்டைய போட நினைப்பதா ?  புரட்சித்தலைவரின் விதியை திருத்தி சதியை செய்வதா ?   தொண்டனுக்கு வழங்கப்பட்ட உரிமையை பறித்து,  அவர் உணர்வை சிதைப்பதா ? புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு வழங்கப்பட்ட பொதுச் செயலாளரின் பதவியை பறித்து, 

தன் பதவிக்கான… தனக்குத்தானே போட்டுக் கொள்வதா ? தலைமைக்கு ஆசைப்படுகிறாய்… தலைமை கழகத்திற்கு ஆசைப்படுகிறாய்… புரட்சித்தலைவர் இருந்த இடத்தில்…. புரட்சித்தலைவி இருந்த இடத்தை அலங்கரிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாய். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இன் ராமாவரம் தோட்டம் எங்கிருக்கிறது ? என்பது உனக்கு என்றாவது தெரிந்திருக்கிறதா…

புரட்சித்தலைவரின் சொந்த பந்தங்களை பார்த்து நீ பேசியதுண்டா…. புரட்சித்தலைவரின் ஆற்காடு இல்லம் எங்கு இருக்கிறது என்பதை ஏறெடுத்தும் என்றாவது நீ பார்த்ததுண்டா… இன்று நீ இருக்கும் தலைமைக் கழகம் என்பது திருமதி ஜானகியமாரின் சொந்த சொத்து. அந்த அம்மாவிற்கு எந்தவித நன்றி கடனையாவது நீ செய்து காண்பித்ததுண்டா?

இப்படி கழகத் தலைமைகளுக்கு எந்த நன்றியும் இல்லாத…. எந்த விசுவாசமும் இல்லாத… சிலுவம்பாளையம் சின்னச்சாமியை…  நம் தலைவன் என்று சொல்லுவதா ?  அந்த தலைமையை நாமெல்லாம் ஏற்றுக் கொள்வதா ? தகுதியே இல்லாத தருதலையை தலைமை தாங்க அழைப்பதா ? புறந்தள்ளப்பட்ட அந்த போக்கிரியே பொதுச்செயலாளர் என்று கூறுவதா ? வெட்கம், வேதனை என எட்டப்படியை கடுமையாக விமர்சித்தார்.