இன்றைய காலகட்டத்தில் இணையதள பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. பலர் இணையத்தில் தங்களைப் பற்றிய வீடியோக்களை எடுத்து வெளியிடுகிறார்கள். அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் டிக் டாக் செயலி என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டிக் டாக் செயலியில் இளைஞர் ஒருவர் வீடியோ பதிவிடுவதற்காக‌ வேகமாக வந்து கொண்டிருந்த ரயிலின் முன்பாக டிக் டாக் செய்துள்ளார். இதை அங்கிருந்தவர்கள் பார்த்து வாலிபரை எச்சரித்துள்ளனர். இருப்பினும் அந்த வாலிபர் கேட்காமல் வேகமாக வந்து கொண்டிருந்த ரயிலின் முன்பு டிக் டாக் செய்தார். அப்போது ரயில் வாலிபரை தூக்கி வீசியது. அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் உயிர் தப்பிவிட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/ViciousVideos/status/1654802069985845259?s=20