நாட்டில் தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு என்பது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக எரிசக்தி மாற்றத்திற்கான குழு பெரிய நகரங்களில் 2027-ம் ஆண்டுக்குள் டீசலில் இயங்கும் வாகனங்களை தடை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. இதே போன்று முன்னாள் பெட்ரோலிய செயலாளர் தருண் கபூர் தலைமையிலான கமிட்டி மூன்று சக்கர வாகனங்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவைகளின் பயன்பாட்டை நிறுத்துமாறு பரிந்துரை செய்துள்ளது. அதாவது நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை பயன்படுத்தினாலும் மின்சார வாகனங்களின் பயன்பாடு என்பதும் அதிகரித்து வருகிறது.

அதே சமயம் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை விட மின்சார வாகனங்களில் செலவும் குறைவாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டீசலில் இயங்கும் வாகனங்களை படிப்படியாக குறைக்க வேண்டும் என அறிவுறுத்தினாலும் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரிய நகரங்களில் டீசல் வாகனங்களை தடை செய்வதை அரசு ஏற்கவில்லை என்பதை பெட்ரோலிய அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

தருண் கபூர் தலைமையிலான கமிட்டி மூன்று சக்கர வாகனங்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வழக்கமான என்ஜின்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் எனவும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பெரிய நகரங்களில் 2027-ம் ஆண்டுகொள் டீசல் வாகனங்களை பயன்படுத்துவதை தடை செய்துவிட்டு மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என ஆற்றல் மாற்றத்திற்கான குழு பரிந்துரை செய்துள்ளது