அதானி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அடங்கிய நிபுணர் குழுவை அமைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதானி குழுமம் தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை குறித்து விசாரணை நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை எனக்க்கூறியவர் எந்த ஒழுங்குமுறை அமைப்பின் கண்காணிப்பிலும் தலையிட நீதிமன்றத்திற்கு விருப்பமில்லை என்று தெரிவித்தார்.

இருப்பினும் இந்திய முதலீட்டாளர்களின் பணம் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்ற தலைமை நீதிபதி மத்திய அரசு விரும்பினால் நீதிபதி அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து அதானி குழுமத்தின் நடவடிக்கையை கண்காணிக்கலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.