2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டானது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல்  செய்யப்பட்டது.  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பட்ஜெட் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள் பற்றி பேசிய நிர்மலா சீதாராமன் காங்., கட்சியை காட்டமாக தாக்கினார். ஊழலைப் பற்றி பேசுவது யார்? காங்., கட்சியா?.. காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் ஊழலைப் பற்றி பேசுவதுதான் விந்தையாக உள்ளது. ஊழலைப் பற்றி பேசுவதற்கு முன், டெட்டால் ஊற்றி வாயை கழுவ வேண்டும். அப்படி டெட்டால் ஊற்றி வாயை கழுவினாலும் சுத்தமாகிவிடாது என்று கடுமையாக விமர்சித்தார்.