கிழக்கு போலந்தை சேர்ந்தவர் ஜான் கிளான்சஸ்கி. இவர் பிறந்த போது பெரியதாக இருந்த குடும்பம் இவர் வளர வளர சரிந்துக்கொண்டே வந்தது. கடைசியாக எஞ்சிய இவரது தந்தையும் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். தனிமையில் இருந்த இவர் தனது தாத்தா சொல்லிய விஷயம் திடீரென ஆவலை தூண்டியுள்ளது. அதாவது இவரது தாத்தாவின் சொந்த ஊர் கிழக்கு போலந்து கிடையாது. போருக்கு பயந்து குடும்பத்தை காக்க வந்த இடம்தான் இது.

அதற்கு முன்னாடி இவர்கள் தற்போதைய மேற்கு உக்கரைனில் வசித்து வந்திருக்கின்றனர். 1939 ஆம் ஆண்டு ஜெர்மனிக்கும் சோவியத் ரஷ்யாவிற்கும் இடையே போர் பூண்டது. இந்த போரில் ரஷ்யாவின் படைக்கு பயந்து இவரின் குடும்பம் கிழக்கு போலந்துக்கு தப்பி ஓடி விட்டது. அதற்கு முன்னதாக தங்களிடமிருந்த வெள்ளி, தங்க பொருட்களை பாதாள அறைக்குள் வைத்துள்ளனர். உயிர்பிழைத்தால் மீண்டும் எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறி தப்பியுள்ளனர். தப்பிக்கும் முயற்சியில் குடும்பத் தலைவர் சோவியத் ராணுவத்தால் கொல்லப்பட்டார்.

உயிர் பிழைத்த மற்றவர்கள் ஆப்பிரிக்கா, பிரிட்டன் என பல்வேறு நாடுகளுக்கு சென்ற நிலையில் போலந்தில் இருந்தவர்கள் மட்டும் உயிர் பிழைத்திருந்தனர். அப்படி உயிர் பிழைத்தவருக்கு பிறந்த பேரன் தான் இவர். இவர் சிறுவனாக இருந்தபோது இவருடைய தாத்தா தங்களின் புதையல் குறித்து அடிக்கடி சொல்லிக் கொண்டுள்ளார். பின்னர் ஒரு நாள் இவர் தாத்தாவிடம் புதையல் இருக்கும் இடத்தை வரைந்து கொடுக்கும் படி கேட்க தனது ஞாபகத்தில் இருந்த இடத்தை வரைந்து கொடுத்திருக்கின்றார் தாத்தா.

இது மட்டுமல்லாமல் அந்த வரைபடத்தில் இரண்டு வரிகளையும் எழுதி உள்ளார். அதாவது நீ எப்படியாவது எனது துப்பாக்கிகளையும் தங்க சிலுவைகளையும் கண்டுபிடித்திட வேண்டும் என கூற அவரும் புதையலை தேடி புறப்பட்டு உள்ளார். முயற்சியை கைவிடாமல் தேடியவர் எப்படியோ ஒரு வழியாக புதையலை கண்டுபிடித்துள்ளார். புதையலில் ஏராளமான வெள்ளி பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தாத்தா சொன்னது போல தங்க சிலுவைகளும் துப்பாக்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த புதையலை கண்டுபிடித்த இவர் இதன் மதிப்பை விட இதனை கண்டுபிடித்த சந்தோஷம்தான் மனதை நிறைவு செய்துள்ளது என கூறியுள்ளார்.