சீனாவில் நீண்ட காலமாகவே ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டம் இருந்தது. இதனால் அந்த நாட்டில் குழந்தைகள், இளைஞர்களுடைய எண்ணிக்கை குறைய தொடங்கி முதியவர்களுடைய எண்ணிக்கை மட்டும் அதிகரிக்க தொடங்கியது. இதனால் 2015 ஆம் வருடம் இந்த சட்டமானது ரத்து செய்யப்பட்டு மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் அரசு திணறியது.

இதனால் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க செய்யும் விதமாக பல நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. ஏன் திருமணம் ஆகாதவர்கள் கூட குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று சமீபத்தில் சிச்சுவான் மாகாணம் அரசு அனுமதி வழங்கியது.  இந்நிலையில் புதுமண தம்பதிகளுக்கு சம்பளத்துடன் 30 நாட்கள் விடுமுறை அளிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டில் மக்கள் தொகை குறைந்துவருவதையடுத்து அவற்றை அதிகரிக்க தற்போது இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.