பூமியில் சொர்க்கம் என்று அழைக்கப்படும் வெனிஸ் நகரம் வறட்சியை கொண்டுள்ளது சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது. ஐரோப்பாவில் உள்ள முக்கிய மலைகளில் குளிர்காலத்தின் போது குறைந்த அளவே பனிபொழிந்ததை அடுத்து ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆண்டு கடுமையான வறட்சி உண்டாகலாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் வெனிஸ் நகரில் போதுமான மழை இல்லாத காரணத்தினால் நகரில் உள்ள புகழ்பெற்ற கால்வாய்கள் வறட்சி அடைந்துள்ளன.

வெனிஸ் நகரில் முக்கிய போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் படகுகள் கால்வாயின் ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் ஒரு பக்கம் வெனிஸ் நகர் கடலுக்குள் மூழ்கி வந்தாலும் ஐரோப்பாவில் உள்ள முக்கிய மலைப்பகுதிகளில் குறைந்த அளவிலான பனிப்பொழிவு காணப்பட்டதால் பெரும்பாலான ஏரிகள் மற்றும் குளங்களில் 50 சதவீதம் நீர் குறைந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் வெனிஸ் நகரில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பிற்கு முக்கிய காரணம் காலநிலை மாற்றம் தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.