நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்னைக்கு புரட்சியாளர் இமானுவேல் சேகரன் அவர்களுக்கும் – எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. என்ன தொடர்பு ? இரண்டு பேரும்  அக்டோபர் ஒன்பதாம் தேதி பிறந்தவர்கள். வெவ்வேறு ஆண்டுகள்…  ஒரே பிறந்த நாள். தேவேந்திரகுல வேளாளர்களுடைய வரலாறு….  ஐயாவை தவிர்த்து யாராலும் எழுத முடியாது. எங்களுடைய இனமான காவலர் சமூக நீதிப் போராளி மருத்துவர் ஐயா அவர்கள்,  இன்று ஒரு அங்கீகாரம் பெறாத தலைவராக இருப்பதாக எனக்கு தோணுது.

அய்யாவை அருகில் இருந்து பார்த்தவன் நான்…. அய்யாவுடைய நோக்கங்கள்….. ஐயாவுடைய தொலைநோக்கங்கள்…. அவருடைய சிந்தனைகள்….. நம்முடைய மொழிக்காக… மண்ணுக்காக… மக்களுக்காக… விவசாயத்திற்காக… என் சுற்றுச்சூழலுக்காக… காலநிலை மாற்றம் என்று இன்று வரை எந்த கட்சிக்கும் தமிழ் நாட்டில் அதைப் பற்றி தெரியாது. ஆனால் அப்படி ஒரு பிரச்சனை வரும் என்று 20,  25 ஆண்டுகளுக்கு முன்னாலே ஐயா சொல்லி இருக்காரு. மது ஒழிப்பு, மதுவிலக்கு, ஐயாவை தவிர்த்தது இன்று வேறு யாரு அதை பேசிக் கொண்டிருக்கிறார்கள் ?

சமூக நீதிக்காக இன்றைக்கு தமிழ்நாட்டிலேயே…. இந்தியாவிலேய… முதன்மையான தலைவர் மருத்துவர் ஐயா தான் என  அடிச்சு  சொல்ல முடியும்.  இந்தியாவிலேயே இன்றைக்கு வாழுகின்ற தலைவர்களில் 6 இட ஒதுக்கீடுகளை பெற்று தந்த ஒரு தலைவர் மருத்துவர் ஐயா அவர்கள்… அதில் நான்கு இட ஒதுக்கீடுகள் தமிழ்நாட்டில்….

இரண்டு இட ஒதுக்கீடுகள் இந்தியா அளவில்…  எனக்கு தெரிந்து இந்தியாவிலேயே இப்ப வாழுகின்ற தலைவர்களோ அல்லது வாழ்ந்த தலைவர்களோ யாரும் ஒரு இட ஒதுக்கீடு மேல பெற்று தந்ததாக எனக்கு தெரியவில்லை. ஆனால் மருத்துவர் ஐயா 6 இட ஒதுக்கீடுகள் பெற்று தந்தார்கள். இது தான்  உண்மையான சமூக நீதி. இப்படி ஒரு புரட்சியாளர் மருத்துவர் ஐயா அவர்கள் என பேசிறுமையாக பேசினார்.