துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் விமான நிறுவனம், தனது பிரம்மாண்டமான ஏர்பஸ் ஏ380 விமானத்தைச் சாண்டா கிளாஸின் பனிச்சறுக்கு வாகனமாக உருவகப்படுத்தி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் விளம்பர வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Introducing the Sleigh380. Santa’s going long-haul this year!
Merry Christmas from Emirates. 🎅🎄🎁 pic.twitter.com/RqsHdcqAQC
— Emirates (@emirates) December 23, 2025
இந்த வீடியோவில், விமானத்தின் முன்பகுதியில் சிகப்பு நிற மூக்கு மற்றும் கலைமான் கொம்புகள் பொருத்தப்பட்டு, அதன் பின்னால் ஏராளமான பரிசுப் பொருட்கள் அடங்கிய பெரிய வாகனம் இணைக்கப்பட்டிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதாகப் பலரும் நினைத்த நிலையில், இதனைச் சிஜிஐ தொழில்நுட்பத்தைக் கொண்டு ஒவ்வொன்றாகக் கைப்பட செதுக்கியதாகத் தனது நீண்டகாலக் கூட்டாளியான முஸ்தபா எல்டியாஸ்டியுடன் இணைந்து எமிரேட்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
