ADMK கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம்  OPS  தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட செயலாளர் மகிழன்பன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் உரிமை மீட்புக் குழு சார்பாக இந்த மிகப்பெரிய சிறப்பான மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் தலைமை கழக  நிர்வாகிகள் ஆலோசனைக்  கூட்டத்திற்கு இங்கே வருகைத் தந்து நமக்கெல்லாம் பெருமை சேர்த்திருக்கும்….

எனவே அந்த ஐயா என்ற வார்த்தைக்கு தகுதியான அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார். கழகத்தினுடைய இணை ஒருங்கிணைப்பாளர் அருமை அண்ணன் வைத்தியலிங்கம் சட்டமன்ற  உறுப்பினர் அவர்களே….. சட்டமன்ற உறுப்பினரும் கழகத்தினுடைய துணை ஒருங்கிணைப்பாளருமான,  அருமை அண்ணன் மனோஜ் பாண்டியன் அவர்களே….  இந்த நிகழ்ச்சியை வெகுச் சிறப்பாக,

சிறத்தையோடு இங்கு ஏற்பாடு செய்திருக்கிற சென்னை மாவட்டத்தினுடைய பொறுப்பாளராகப்  பொறுப்பேற்று, நமக்கெல்லாம் வழிகாட்டிக் கொண்டிருக்கிற  முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர், கழகத்தினுடைய துணை ஒருங்கிணைப்பாளர் ஜே.டி.சி பிரபாகரன் அவர்களே….   இந்த  சிறப்பான நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கின்ற கழகத்தினுடைய அமைப்புச் செயலாளர்கள் அருமை அண்ணன் புகழேந்தி அவர்களே….

அருமை அண்ணன் மருது அழகுராஜ் அவர்களே….. இங்கு வருகை தந்திருக்கின்ற அனைத்து மாவட்ட கழகச் செயலாளர்களே…..  தலைமைக் கழக நிர்வாகிகளே மற்றும் பெரியோர்களே…. கழக அனைத்து பெரிய  நிர்வாகிகளே….  உங்கள் அத்தனைப் பேருக்கும் முதற்கண் நன்றி கலந்த வணக்கத்தை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிப்பட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை இங்கு நாம் ஏற்பாடு செய்திருக்கிறோம் என்று சொன்னால் இன்றைக்கு சென்னை மாவட்டம் எவ்வளவு எழுச்சியோடு இங்கு காணப்படுகிறது என்பதை நம்முடைய எதிரிகள் உணர வேண்டும். ஏனென்று கேட்டால் அனைத்திந்திய அண்ணா திமுக அவர் பின்னால்தான் இருக்கிறது என்பதை இந்தக் கூட்டம் உணர்த்துகிறது.  அப்படிப்பட்ட ஒரு ஆற்றல்மிக்க தலைவரை…..

ஒரு விசுவாசமிக்க தலைவரை….புரட்சித்தலைவி அம்மாவினுடைய விசுவாசம் மிக்க தொண்டரை நாம் தலைவராக ஏற்பதில் பெருமை அடைகிறோம். வருங்கால 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் ஆட்சிக் கட்டிலில் முதல்வராக அமர்வதற்கு இன்று முதலே நாம் பாடுபடுவோம். பொறுப்பு எடுப்போம், சபதம் எடுப்போம் என்றுக் கூறி முடிக்கின்றேன், நன்றி வணக்கம் என பேசி முடித்தார்.