அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர் ஆகிய 7 பிரிவுகளில் Everything Everywhere All at Once என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதினை பெற்றுள்ளது. அதன்படி சிறந்த திரைப்படத்திற்கான விருதினை Everything Everywhere All at Once திரைப்படம் பெற்றது. அதன்பிறகு இந்த படத்தில் நடித்த மிஷெல் யோ சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார். ஆஸ்கார் விருதினை வென்ற முதல் ஆசிய பெண் என்ற பெருமையையும் இவர் பெறுவார்.

இதனையடுத்து சிறந்த துணை நடிகருக்கான விருதை KeHuy Quan, சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை Jamie Lee Curtis, சிறந்த இயக்குனருக்கான விருதை டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெரட் ஆகியோர் பெற்றுள்ளனர். சிறந்த படத்தொகுப்பு காண விருதை Everything Everywhere All at Once படத்திற்காக பால் ரோஜர்ஸ் வென்றார். மேலும் சிறந்த திரைக்கதை காண விருதையும் இப்படம் வென்றுள்ளது. ஒரே படம் 7 ஆஸ்கர் விருதை வென்றுள்ளது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.