
அமெரிக்காவின் தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் மீண்டும் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இதனை அடுத்து ஒவ்வொரு பதவிக்கும் அதிகாரிகளை நியமித்து வருகிறார். இதில் இந்திய வம்சாவளி அதிகாரிகளும் உள்ளனர். இதைத்தொடர்ந்து டிரம்ப் அமைச்சரவையில் உள்ள ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் தனித்தனியாக பைப் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த நிலையில் ஐ.நா தூதுவராக பணியமர்த்தப்பட்ட எலைஸ் தனக்கு பைப் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக முதல் முதலாக பொதுவெளியில் கூறியுள்ளார். இது அமெரிக்காவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இவரைதொடர்ந்து பீட் ஹெட்செட் என்பவரும் எனக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தெரிவித்துள்ளார். எனது ஏழு குழந்தைகள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் எனக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை உறுதி செய்தார். இருப்பினும் ட்ரம்ப் கூறியதற்காக நான் உழைப்பேன் என கூறினார். இதேபோன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சரான லீ ஜெல்டின் என்பவரும் தனக்கும் பைப் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை உறுதி செய்தார். இதேபோன்று ட்ரம்ப் அமைச்சரவையில் உள்ள 9 அமைச்சர்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2 கொலை முயற்சியில் இருந்து தப்பிய ட்ரம்புக்கு எந்தவித வெடிகுண்டு மிரட்டலும் இதுவரை வரவில்லை. தூய்மையான, அறிவியல் வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்கும் முயற்சியில் ஆட்சி அமைக்கும் பொழுது இவ்வாறு தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இது போன்ற மிரட்டல் வதந்திகளில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இது வெளிநாட்டில் இருந்து செயல்படுத்தப்படுகிறதா? என்ற கோணத்தில் அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.