கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக வீர வரலாற்று எழுச்சி மாநாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்த பின்னும் காவல்துறை அதிகாரிகள் போதிய பாதுகாப்பு அளிக்காது குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலை நேரில் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம்,  அதிமுக மாநாட்டில் உணவுகள் வீணாக கொட்டப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், லட்சக்கணக்கான மக்கள் வரும் நிலையில் முன்னதாக உணவுகள் தயார் செய்யப்பட்டன. இவ்வளவு மீதமாகும் என எதிர்பார்த்தப்படவில்லை, இதை அனுபவமாக கொண்டு எதிர்காலத்தில் இனி அந்தத் தவறு நடைபெறாது என தெரிவித்தார்.

நீட் ரத்து செய்ய டெல்லி சென்று தன்னுடன் போராட்டம் நடத்த தயாரா என அதிமுகவை போராட்டத்திற்கு அழைத்த உதயநிதி ஸ்டாலின் குறித்த கேள்விக்கு :-

உண்ணாவிரத போராட்டத்தில் தந்தையைப் போலவே மகன் உதயநிதி ஸ்டாலினும் நன்றாக நடிக்கிறார், சூழ்சுமம் தெரியும் என்று மக்களை ஏமாற்றி வருவதாகவும், நீட்டுக்கு விதை போட்டுவிட்டு இன்று நாடாளுமன்ற தேர்தலுக்காக நீட்டை கையில் எடுத்து உள்ளனர்.

முன்னதாக டெல்லி சென்ற உதயநிதி ஸ்டாலின் பிரதமரை சந்தித்தபோது நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து அழுத்தம் கொடுத்தாரா ? என கேள்வி எழுப்பி,  காவேரி பிரட்சனையின் பொது அதிமுக மத்திய அரசியலை ஸ்தம்பிக்க வைத்தது, இன்று ஆட்சி அதிகாரம் கையில் வைத்து கொண்டு ஏன் அவர்களால் நடவடிக்கை முடியவில்லை என தெரிவித்தார்.