காவேரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5000, 5000 கனஅடி நீர் வழங்க உத்தரவிட்டது.  நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று தீர்மானம் எடுக்கப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக வழக்கறிஞர் சரவணன்,

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு காங்கிரஸ் அரசு நீர் வழங்குவதை பாரதிய ஜனதா கட்சி அரசியல் ஆக்கி வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் இவர்கள் நீர் வழங்குகிறார்கள். அப்படி தொடர்ந்து நீர் வழங்கினால் நாங்கள் மாநிலம் முழுதும் போராட்டம் நடத்துவோம் என்று சொல்லி வருகிறது.

வாழ்வாதார பிரச்சனையாக இருக்கக்கூடிய இதில் அரசியல் செய்வது பாஜக தான். இதை அரசியல் தீர்வாக இனி எடுத்துச் செல்ல முடியாது. சட்ட ரீதியில் தான் இதை அணுக வேண்டும். உச்ச நீதிமன்றத்திற்கு நாம் செல்ல வேண்டும். நமக்கான உரிமையை தான் அவர்களிடம் கேட்கிறோம்.  அதை கொடுப்பதுதான் சரியாக இருக்கும். ஆனால் இதை வேண்டுமென்றே அரசியல் செய்து வருகிறது பாஜக என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.

காவிரியில் நீர் பெற்றுத் தர முடியாமல் இருப்பதால் தமிழக அரசு பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகிறது. குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்த விஷயத்தில் தோல்வி அடைந்து விட்டது என்றெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.  அண்டை மாநிலமான கர்நாடகாவில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தும் கூட,  திமுகவால் நீர் பெற்று  தர முடியவில்லை. பாரதி ஜனதா கட்சி போராட்டம் நடத்தும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு காங்கிரஸ் இந்த முடிவு எடுத்துள்ளது, திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்ததோடு மட்டுமல்லாமல் தமிழக முதல்வர் ஸ்டாலினையும் அப்செட் ஆக்கி உள்ளது.