கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்ய வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டிருக்கின்றன.

முன்னதாக மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பம் செய்தவர்களில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் மறு பரிசீலனை செய்யப்போகிறோம் என்ற தகவலையும் அரசாங்கம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப நிலை குறித்து குறுஞ்செய்தி பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18/9/2023 முதல் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் ? குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள்…  இந்த மாதம் 18ஆம் தேதியிலிருந்து, அக்டோபர் மாதம் 18ம் தேதி வரை இ சேவை மையம் வாயிலாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம்.

மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரியாக வருவாய் கோட்டாட்சியர், பயனாளிகளின் தகுதிகள் மற்றும் தகுதியின்மை குறித்து தனி நபர்கள் மூலம் பெறப்படும் புகார்கள் குறித்து விசாரணை  செய்வார்  என  தமிழக அரசின் உடைய சிறப்பு திட்டங்கள் செயலாகத் துறை செயலாளர் டேரேஸ் அகமது தெரிவித்துள்ளார்.