தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தில் அதா சர்மா நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது படத்தில் இந்துவாக இருந்த தன்னை முஸ்லிம் மதத்திற்கு கட்டாயம் மதமாற்றம் செய்து ஆப்கானிஸ்தான் சிறையில் அடைத்து தன்னை ஒரு ஐஎஸ் பயங்கரவாதியாக மாற்றிவிட்டதாக ஹீரோயின் கூறுகிறார்.   இந்த படம்  கேரள மாநிலத்தை தவறான முறையில் சித்தரிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இயக்குநர் சுதீப்டோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம்  தமிழகத்தில் மே-7 ஆம் தேதி  மால்களில் உள்ள தியேட்டர்களில் மட்டும் வெளியான நிலையில் அதன்பின்னர் தடை வெளியிடவில்லை. இந்நிலையில் The Kerala Story திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்பட்ட தமிழ்நாடு உள்பட மாநிலங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பாளர் விபுல் ஷா எச்சரித்துள்ளார். லவ் ஜிகாத் என்ற சொல்லாடலை மையமாக கொண்டு வெளியாகியுள்ள இப்படத்தின் காட்சிகள் தமிழ்நாடு. மே.வங்கம், கேரளா மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த தயாரிப்பாளர் விபுல் ஷா, தனது அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றார்.